4 நிதி மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல்: கலைஞர் பல்கலை. உட்பட 14 மசோதாக்கள் நிலுவை

9 hours ago 3

சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் 29-ம் தேதி நிறைவேற்றி அனுப்பப்பட்ட நிதி தொடர்பான 4 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். 14 மசோதாக்கள் அவரிடம் நிலுவையில் உள்ளன.

சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் தாமதம் செய்வதாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், தனது தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தது. மசோதாக்கள் மீது ஆளுநர் ஒரு மாதத்திலும், குடியரசுத் தலைவர் 3 மாதங்களிலும் முடிவு எடுக்க வேண்டும் என்றும் கெடு விதித்து உத்தரவிட்டது.

Read Entire Article