340 திட்டங்களை விரைந்து செயல்படுத்த உதவிய பிரகதி டிஜிட்டல் தளம் குறித்த ஆய்வு முடிவுகள் வெளியீடு

2 months ago 8

சென்னை: ஆக்ஸ்போர்டின் செய்ட் வணிகப் பள்ளி, பெங்களூர் ஐஐஎம்-மில் இந்தியாவின் பிரகதி தளம் தொடர்பான ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது. பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களையும் சமூக மேம்பாட்டுத் திட்டங்களையும் செயல்படுத்தும் முறையை எவ்வாறு சிறப்பாக மாற்றி அமைத்துள்ளது என்பதை பிரகதி தளம் வெளிப்படுத்துகிறது. கேட்ஸ் அறக்கட்டளையின் ஆதரவுடன் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், பிரகதி டிஜிட்டல் தளம், 205 பில்லியன் டாலர் மதிப்புள்ள 340 திட்டங்களை விரைவாக செயல்படுத்த எவ்வாறு உதவியது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

ஆய்வில் வெளியாகியுள்ள முக்கிய அம்சங்கள்:
* 2015-ம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து, 50,000 கி.மீ. புதிய தேசிய நெடுஞ்சாலைகள், புதிய விமான நிலையங்களை அமைத்தல் உள்ளிட்ட பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களின் விரைவான செயல்பாட்டுக்கு இந்த தளம் உதவியாக அமைந்துள்ளது.
* மாநில தலைமைச் செயலாளர்கள், மத்திய அமைச்சகங்களின் அதிகாரிகளுடன் மாதத்திற்கு ஒரு முறை நடைபெறும் கூட்டங்களில் பிரதமர் மோடியின் நேரடி பங்கேற்பு பிரகதி தளத்தின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது. இது டிஜிட்டல் கண்காணிப்புடன் இணைந்து, பொறுப்புணர்வு தொடர்பான புதிய கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளது. குறிப்பிட்ட திட்டங்களை ஆய்வு செய்வதில் பிரதமர் காட்டும் தீவிர ஈடுபாடு, அதிகாரத்துவ முட்டுக்கட்டைகளை உடைக்கவும், அமலாக்கத்தை விரைவுபடுத்தவும் உதவுகிறது.

* உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஏற்படும் தடைகளைத் தீர்க்கும் தீர்வாக பிரகதி உருவெடுத்துள்ளது. நிலம் கையகப்படுத்துதல், சுற்றுச்சூழல் அனுமதி போன்றவற்றில் தாமதங்களைத் தவிர்க்க பிரகதியின் ஒருங்கிணைந்த அணுகுமுறை உதவுகிறது.
* ஒருங்கிணைப்பு திட்டங்களின் செயல்பாட்டுக்கான காலக்கெடுவை குறைத்துள்ளது. ஒரு காலத்தில் 600 நாள் வரை ஆன சுற்றுச்சூழல் அனுமதி இப்போது 70 முதல் 75 நாட்களில் பெறப்படுகிறது.
* தளத்தின் தாக்கம் உள்கட்டமைப்பைத் தாண்டி சமூக மேம்பாட்டு திட்டங்களை விரைவுபடுத்துகிறது. பிரகதி தளத்தின் மேற்பார்வையின் கீழ், கிராமப்புற வீடுகளில் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு, 5 ஆண்டில் 17%ல் இருந்து 79% வரை அதிகரித்துள்ளது.
* மக்களின் குறைகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் கால அளவை 32 நாட்களில் இருந்து 20 நாட்களாகக் குறைக்க இந்த தளம் உதவியது.
* அரசியல் வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் மத்திய – மாநில அரசுகள் திறம்பட ஒன்றிணைந்து செயல்படும் ஒரு நடுநிலையான மன்றத்தை பிரகதி உருவாக்கியுள்ளது.

The post 340 திட்டங்களை விரைந்து செயல்படுத்த உதவிய பிரகதி டிஜிட்டல் தளம் குறித்த ஆய்வு முடிவுகள் வெளியீடு appeared first on Dinakaran.

Read Entire Article