* லக்னோவில் இன்று நடைபெறும் ஐபிஎல் 30வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.
* லக்னோ இதுவரை ஆடியுள்ள 6 போட்டிகளில் பாதிக்கு பாதி வெற்றியை ருசித்துள்ளது.
* சென்னை அணியோ, தான் விளையாடிய 6 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றியை பெற்றுள்ளது. அதுவும் தொடர்ந்து 5 தோல்விகளை பெற்று பரிதாப நிலையில் உள்ளது.
* இந்த நிலையில்தான் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோவும், மீண்டும் கேப்டனாகி உள்ள தோனி தலைமையிலான சென்னையும் இன்று தங்கள் 7வது லீக் போட்டியில் மோத இருக்கின்றன.
* புது அணியான லக்னோவுடன் இதுவரை 5 போட்டிகளில் மட்டுமே சென்னை அணி மோதியுள்ளது.
* அவற்றில் லக்னோ 3-1 என்ற கணக்கில் வென்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது. ஒரு போட்டி (2023) மழையால் ரத்தாகியது.
* இந்த போட்டிகளில் இதுவரை அதிகபட்சமாக சென்னை 217, லக்னோ 213 ரன் விளாசி இருக்கின்றன.
* குறைந்தபட்சமாக லக்னோ 180, சென்னை 176 ரன் வெளுத்துள்ளன.
* இவ்விரு அணிகளும் மற்ற அணிகளுடன் கடைசியாக மோதிய 5 போட்டிகளில் லக்னோ வெற்றிகளை அதிகம் வைத்திருக்கிறது.
* ஆனால் சென்னை தான் கடைசியாக மற்ற அணிகளுடன் விளையாடிய 5 போட்டிகளிலும் தோல்விகளை மட்டுமே பெற்றுள்ளது.
* லக்னோவில் இந்த 2 அணிகளும் இதுவரை 2 முறை மட்டுமே நேருக்கு நேர் சந்தித்துள்ளன.
* அவற்றில் ஒரு ஆட்டத்தில் லக்னோ 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மற்றொரு போட்டி மழையால் ரத்தானது.
The post 30வது போட்டியில் இன்று வலுவான நிலையில் லக்னோ வளைக்க பார்க்கும் சென்னை appeared first on Dinakaran.