300வது திருட்டு கேபிள் திருடனுக்கு வாழ்த்து போஸ்டர்

2 months ago 7

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் கேபிள் வயர் திருடனை வாழ்த்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அந்த போஸ்டரில், வாழ்த்துகிறோம்… இன்டர்நெட் கேபிள் திருடா! ஆலங்குடிக்கு டப் கொடுக்கும் எங்கள் ஆருயிர் திருடனே!. சிசிடிவிக்கே தண்ணீ காட்டும் எங்கள் திருடர் குல திலகமே!. அண்ணன் ஸ்டைல் Splendor பாண்டியின் 300வது திருட்டு விழா வெற்றி பெறவும், 1000வது திருட்டு விழாவை தாங்கள் கொண்டாடவும் மனமார வாழ்த்துகிறோம்’ என்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தது. இப்படிக்கு ஆல்பா குரூப்ஸ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் சமூகவலை தளங்களில் வைரலானது. இதையடுத்து கேபிள் திருட்டில் ஈடுபட்டு வந்த கல்லாலங்குடியை சேர்ந்த ஆரோக்கிய சுந்தர் ஜெயசீலனை (36) போலீசார் கைது செய்தனர். நகரம் திரைப்படத்தில் நடிகர் வலுவேலுக்கு 100வது திருட்டு விழா வெற்றி பெற வாழ்த்துவதாக போஸ்டர் அடித்து ஊர் முழுவதும் ஒட்டியிருப்பர். அதே பாணியில் இந்த போஸ்டரும் ஒட்டப்பட்டுள்ளது.

The post 300வது திருட்டு கேபிள் திருடனுக்கு வாழ்த்து போஸ்டர் appeared first on Dinakaran.

Read Entire Article