பொன்னேரி: மீஞ்சூர் ஒன்றியம், பழவேற்காடு அடுத்த செஞ்சியம்மன் நகர் கிராமத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. இதில் மீஞ்சூர் வட்டார வள மையம் மேற்பார்வையாளர் செந்தில் ஆனந்த், மீஞ்சூர் வட்டாரக் கல்வி அலுவலர் வினோத்குமார், ஆசிரியர் பயிற்றுனர் எட்வர்டு ஹென்றி, திருப்பாலைவனம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராகதேவன், ஜமீலாபாத் உயர்நிலைப் பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் தாளமுத்து நடராசன் மற்றும் கரிமணல் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் சுமார் 35 மாணவர்கள் கண்டறியப்பட்டு அவர்களில் 30 மாணவர்கள் நேற்று உரிய பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் கிராமக் கூட்டம் கூட்டப்பட்டு அக்கூட்டத்தில் கல்வியின் அவசியம் குறித்து பேசப்பட்டது. இக்கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் பழனிச்சாமி, உறவு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் மஞ்சு, கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் ஜெடராயன், செஞ்சியம்மன் நகர் கிராம நிர்வாகி ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post 30 மாணவர்கள் பள்ளிகளில் சேர்ப்பு appeared first on Dinakaran.