3-வது ஒருநாள் போட்டி; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அயர்லாந்து அபார வெற்றி

3 months ago 23

அபுதாபி,

தென் ஆப்பிரிக்கா - அயர்லாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அபுதாபியில் நடைபெற்றது. இதில் முதல் இரு போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை ஏற்கனவே கைப்பற்றிவிட்டது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது .இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற அயர்லாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து அயர்லாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆண்ட்ரூ பால்பிர்னி மற்றும் பால் ஸ்டிர்லிங் ஆகியோர் களம் இறங்கினர். இதில் ஆண்ட்ரூ பால்பிர்னி 45 ரன்னிலும், அடுத்து வந்த கர்டிஸ் கேம்பர் 34 ரன்னிலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான பால் ஸ்டிர்லிங் அரைசதம் அடித்த நிலையில் 88 ரன்னிலும் அவுட் ஆகினர்.தொடர்ந்து ஹாரி டெக்டர் - லோர்கன் டக்கர் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இதில் ஹாரி டெக்டர் ஒருபுறம் நிலைத்து நின்று ஆடினார். மறுமுனையில் லோர்கன் டக்கர் 26 ரன்னிலும், அடுத்து களம் இறங்கிய ஜார்ஜ் டோக்ரெல் 6 ரன், மார்க் அடேர் 8 ரன், கிரஹாம் ஹியூம் 1 ரன், பியோன் ஹேண்ட் ரன் எடுக்காமலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய ஹாரி டெக்டர் அரைசதம் அடித்த நிலையில் 60 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் அயர்லாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 284 ரன்கள் குவித்தது. அயர்லாந்து தரப்பில் பால் ஸ்டிர்லிங் 88 ரன், ஹாரி டெக்டர் 60 ரன் எடுத்தனர்.தென் ஆப்பிரிக்கா தரப்பில் லிசாட் வில்லியம்ஸ் 4 விக்கெட், ஒட்னீல் பார்ட்மேன், ஆண்டிலே பெஹ்லுக்வாயோ ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 285 ரப் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா விளையாடியது.

ரியான் ரிக்கெல்டன் 4 ரன்னிலும், ஹென்ரிக்ஸ் 1 ரன்னிலும், வான் டெர் டுஸ்சன் 3 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின் தென்ஆப்பிரிக்கா அணியால் சரிவில் இருந்து மீள முடியவில்லை. ஜேசன் ஸ்மித் மட்டும் தாக்குப்பிடித்து விளைாடினார். அவர் 93 பந்தில் 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து தென்ஆப்பிரிக்கா 46.1 ஓவரில் 215 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் அயர்லாந்து 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.அயர்லாந்து பந்து வீச்சாளர்கள் கிரஹாம் ஹும், கிரேக் யங் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

Read Entire Article