3 வகையான வங்கி கணக்குகள் இன்று முதல் மூடல்

2 days ago 5

புதுடெல்லி,

ஆன்லைன் மோசடிகளை தடுக்க செயலற்ற வங்கிக்கணக்குகள் உள்ளிட்ட 3 வகையான கணக்குகளை மூட வேண்டும் என்று ஏற்கனவே ரிசர்வ் வங்கி முடிவெடுத்திருந்த நிலையில் அந்த நடவடிக்கை இன்று முதல் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2 ஆண்டுகளுக்கு மேலாக பணப் பரிமாற்றம் நடக்காத வங்கி கணக்குகள் மூடப்படுகின்றன. செயலற்ற வங்கி கணக்குகளை மோசடி நபர்கள் குறிவைப்பதால் அவற்றை மூட ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளது. 12 மாதங்களாக எந்தவித பணப் பரிமாற்றமும் நடக்காத வங்கி கணக்குகளும் மூடப்படுகின்றன. நீண்ட காலமாக பூஜ்ஜிய தொகையை மட்டும் வைத்திருக்கும் வங்கி கணக்குகள் மூடப்படுவதாகவும் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்குகள் இந்த ரகத்தை சேர்ந்தவையா என பரிசோதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read Entire Article