3 பேர் மீது குற்றம்சாட்டியுள்ளதை கண்டித்து வேங்கைவயலுக்கு செல்ல முயன்ற விசிகவினர் கைது

2 weeks ago 3

புதுக்கோட்டை / தருமபுரி: குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் 3 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளதைக் கண்டித்து, வேங்கைவயலுக்கு போராட்டம் நடத்தச் சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில், அதே பகுதியைச் சேர்ந்தவரும், மணமேல்குடி காவல்நிலைய போலீஸ்காரருமான ஜெ.முரளி ராஜா(32), வேங்கைவயல் பி.சுதர்ஷன்(20), கே.முத்துகிருஷ்ணன்(22) ஆகியோர் குற்றம் செய்ததாக சிபிசிஐடி போலீஸாரால் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Read Entire Article