
சென்னை,
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 14-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு மறுநாள் 15-ந்தேதி வேளாண் பட்ஜெட்தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், வார விடுமுறை மற்றும் ரம்ஜான் பண்டிகை விடுமுறை என 3 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடியுள்ளது. பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை மீதான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று வருகிறது.
மேலும் காவிரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டப்பணி குறித்து அதிமுக எம்.எல்.ஏ. சி.விஜயபாஸ்கர் கொண்டுவரும் கவன ஈர்ப்புத் தீர்மானம் மீது அவையில் விவாதம் நடத்தப்படுகிறது. கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதத்திற்கு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளிக்க உள்ளார்.