2வது டெஸ்ட்: நோமன் அலி சூழலில் வீழ்ந்த இங்கிலாந்து...பாகிஸ்தான் அபார வெற்றி

3 months ago 22

முல்தான்,

பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி முல்தானில் நடந்தது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்சில் 366 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக கம்ரான் குலாம் 118 ரன் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜேக் லீச் 4 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. அதிரடியாக விளையாடிய பென் டக்கெட் சதம் அடித்த நிலையில் 114 ரன்னில் ஆட்டம் இழந்தார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 291 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் சஜித் கான் 7 விக்கெட்டுகளை அள்ளினார்.இதனை தொடர்ந்து பாகிஸ்தான் அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.ஆகா சல்மான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.இதனால் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் பஷீர் 4 விக்கெட்டும் ஜேக் லீச் 3 விக்கெட்டும் வீத்தினர். இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு 297 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் பென் டக்கெட் 0, க்ராவ்லி 3 ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் நேற்று 3-ம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 36 ரன்கள் எடுத்தது. 4வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது .

இங்கிலாந்து அணி பாகிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் மட்டும் நிலைத்து விளையாடி 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 144 ரன்களுக்கு ஆட்டமிழந்தது . இதனால் பாகிஸ்தான் அணி 152 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . சிறப்பாக பந்துவீசி நோமன் அலி 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார் .

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் உள்ளது

Read Entire Article