₹25 லட்சத்தில் திட்ட பணிகள்

3 months ago 18

கெங்கவல்லி, அக்.8: கெங்கவல்லி அருகே கூடமலை ஊராட்சியில் கவுண்டபாளையம் பஸ் நிறுத்தத்தில், புதிய நிழற்கூடம், கெங்கவல்லி எம்எல்ஏ நிதியிலிருந்து ₹10லட்சம் மதிப்பீட்டிலும், கூடமலை- நரிப்பாடி செல்லும் சாலையில், கான்கிரீட் சாலை மாவட்ட கவுன்சிலர் கூடமலை ராஜா நிதியிலிருந்து ₹5 லட்சம் மதிப்பீட்டிலும், கூடமலை ஒன்றிய கவுன்சிலர் உமாராணி, ஒன்றிய பொது நிதியிலிருந்து ஒத்தலக்காடு பகுதியில் ₹10லட்சத்தில் உலர்களம் உள்ளிட்ட ₹25லட்சம் மதிப்பீட்டிலான பணிகள் தொடங்குவதற்காக, கெங்கவல்லி எம்எல்ஏ நல்லதம்பி பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இதில் கெங்கவல்லி ஒன்றிய செயலாளர் கூடமலை ராஜா, கூடமலை ஊராட்சி தலைவர் யசோதா துரைசாமி, துணை தலைவர் முத்துலிங்கம், அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் முருகேசன், தம்மம்பட்டி நகர செயலாளர் குமரன், ஒன்றிய கவுன்சிலர் உமாராணி, கவுன்சிலர் ஆறுமுகம் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

The post ₹25 லட்சத்தில் திட்ட பணிகள் appeared first on Dinakaran.

Read Entire Article