25 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டல் முறையில் ரீ-ரிலீஸாகும் 'சேது' திரைப்படம்

1 week ago 3

சென்னை,

நடிகர் விக்ரமின் நடிப்பில் 1999ம் ஆண்டு வெளியான படம் 'சேது'. இது விக்ரம் நடிப்பில் வெளியான மறக்க முடியாத திரைப்படமாகும். இந்த படத்தினை இயக்குனர் பாலா இயக்கியிருந்தார். இது பாலாவின் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம்தான் விக்ரமின் திரை வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.

இதில் சிவகுமார், அபிதா, ஸ்ரீமன், மோகன் வைத்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் குவித்தது.

இந்தநிலையில், தற்போது இப்படத்தினை புதிய பொலிவுடன் டிஜிட்டல் முறையில் ரீ-ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. அதாவது, படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு வெளியிட உள்ளனர். இது, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு விக்ரம் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

 

Read Entire Article