'24 குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசை ஆனால்..' - நடிகை ரோஜா பேட்டி

10 hours ago 3

சென்னை,

1990 கால கட்டங்களில் தென்னிந்தியா திரை உலகையே கலக்கியவர் நடிகை ரோஜா. தெலுங்கு படங்களின் மூலம் சினிமா உலகில் அறிமுகமான நடிகை ரோஜா, ஆர்கே செல்வமணி இயக்கத்தில் வெளியான 'செம்பருத்தி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து ரஜினிகாந்த், சரத்குமார், மம்முட்டி, அர்ஜுன், பிரபு என பல முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் சினிமாவையும் தாண்டி அரசியலிலும் கால் பதித்துவருகிறார். இவர் இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை காதலித்து 2001-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகளும் இருக்கின்றனர். இந்த நிலையில் இயக்குனர் ஆர்.கே.செல்வமணியும் ரோஜாவும் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில், " நானும் எனது கணவரும் காதலித்த நேரத்தில் 24 குழந்தைகள் பெத்தெடுக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தோம். அந்த குழந்தைகளை உலக நாடுகள் போற்றும் வகையில், வளர்க்க வேண்டும் என்று ஆசை இருந்தது.

ஆனால், அப்போது எனக்கு குழந்தை பிறக்காது என்று மருத்துவர் சொன்னதால் என் மனதை உடைந்து விட்டது. பின், கடவுள் எனக்கு இரண்டு குழந்தைகளை பரிசாக கொடுத்தார். நம்மளை மீறி ஒரு சக்தி இருப்பதை அப்போது தான் உணர்ந்தோம்" என்று தெரிவித்துள்ளனர்.      

Read Entire Article