
மும்பை,
சர்வதேச சூழ்நிலை, இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் உள்பட பல்வேறு காரணிகள் இந்திய பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தையில் இன்று பேங்க் நிப்டி சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதன்படி, 7 புள்ளிகள் ஏற்றம்பெற்ற நிப்டி 24 ஆயிரத்து 335 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 41 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 55 ஆயிரத்து 391 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
97 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 26 ஆயிரத்து 193 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேவேளை, 70 புள்ளிகள் ஏற்றம் பெற்ற சென்செக்ஸ் 80 ஆயிரத்து 288 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
5 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 195 புள்ளிகள் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 216 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 62 ஆயிரத்து 981 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.