24 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்: சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவு

3 months ago 19

சென்னை: சென்னையில் 24 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் 24 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, காவல் ஆய்வாளர் எஸ்.புவனேஸ்வரி என்2 காசிமேடு காவல் நிலையத்தில் இருந்து கிண்டிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். காவல் ஆய்வாளர் ஆர்.ரஞ்சித் குமார் – மாம்பலம் காவல் நிலையத்துக்கும், எஸ். விவேகானந்தன் – தண்டையார்பேட்டை காவல் நிலையத்துக்கும், முகமது புஹாரி – திருவான்மியூர் காவல் நிலையத்துக்கும், மணிவண்ணன் – மெரினா காவல் நிலையத்துக்கும், அரோக்கிய மேரி- குற்ற பதிவு பணியகத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆனந்தன் – அயனாவரம் குற்ற பிரிவுக்கும், அம்பேத்கர் – புளியந்தோப்பு குற்ற பிரிவுக்கும், ஆனந்தபாபு – திருவொற்றியூர் குற்ற பிரிவுக்கும், வீரம்மால்- சவுந்தரபாண்டியனார் அங்காடி சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

காவல் ஆய்வாளர் அருள் ராஜ் – மதுரவாயல் காவல் நிலையத்துக்கும், வசந்த ராஜா – காசிமேடு காவல் நிலையத்துக்கும், ஞான சித்ரா – சிசிபி, நிவாசன் – கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்துக்கும், கண்ணன்- கொருக்குபேட்டை காவல் நிலையத்துக்கும், கருணாகரன் – நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், கே.எஸ்.ராஜா – ஜேஜே நகர் காவல் நிலையத்துக்கும், ஜெயபிரகாஷ் – ஓட்டேரி காவல் நிலையத்துக்கும், ஹரிஹரன் – பூக்கடை காவல் நிலையத்துக்கும், ஜானி செல்லப்பா – மாதவரம், ரெஜினா – விருகம்பாக்கம் காவல் நிலையத்துக்கும், பிரசித் தீபா – புழல் காவல் நிலையத்துக்கும், செல்வகுமாரி – வளசரவாக்கம், ஜெயலாலி – எம்கேபி நகர் காவல் நிலையத்துக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 

The post 24 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்: சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article