23-வது படம்...அசோக் செல்வனுக்கு ஜோடியாகும் பிரீத்தி முகுந்தன்

14 hours ago 2

சென்னை,

தமிழில் 'சூதுகவ்வும்' படத்தில் அறிமுகமாகி வித்தியாசமான கதைகளில் நடித்து வரும் அசோக் செல்வனுக்கு 'ஓ மை கடவுளே' திருப்புமுனை படமாக அமைந்தது. மேலும் நித்தம் ஒரு வானம், சில நேரங்களில் சில மனிதர்கள், ஹாஸ்டல், மன்மத லீலை உள்ளிட்ட படங்களில் இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

இதைத்தொடர்ந்து, சபாநாயகன், ப்ளூ ஸ்டார், பொன் ஒன்று கண்டேன் கடைசியாக எமக்கு தொழில் ரொமான்ஸ் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், அசோக் செல்வனின் 23-வது படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி, அறிமுக இயக்குனர் கார்த்திக் ராமகிருஷ்ணன் இயக்கும் இப்படத்திற்கு விக்னேஷ் ராஜா கதை எழுதி இருக்கிறார். இப்படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாகும் பிரீத்தி முகுந்தன் நடிக்கிறார். நேற்று இப்படத்தின் பூஜை நடைபெற்றது.

Very very excited to announce our next project #AS23 Starring @AshokSelvan and @PreityMukundan Directed by #KarthikRamakrishnan written by @vigneshraja89 More details to follow @abinaya_selvam pic.twitter.com/g1V9O4uNGC

— Happy High Pictures (@HappyHighPic) February 9, 2025
Read Entire Article