சென்னை: புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் 21 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த அக்.1ம் தேதி முதல் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. தற்போது வரை இது இயல்பை விட 73% அதிக மழைப்பொழிவை கொடுத்திருக்கிறது. அடுத்தடுத்த நாட்களில் மழை மேலும் தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், வேலூர், கடலூர், தஞ்சை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை,சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
புதுச்சேரியில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை முதல் புதுச்சேரியில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
The post 21 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு: புதுச்சேரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.