21 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு கும்பாபிஷேகம்

2 weeks ago 5

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு பேரூராட்சிக்கு உட்பட்ட ஆஞ்சநேயர் நகரில் ஸ்ரீ கல்யாண ராமர் சமேத வீரமங்கலம் ஆஞ்சநேயர் கோயில் நுழைவு வாயிலில் புதிதாக 21 அடி உயரம் கொண்ட வாயு ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதன் கும்பாபிஷேக விழா கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை வாஸ்து பூஜை, கணபதி ஹோமம் உள்ளிட்ட ஹோம குண்ட பூஜைகள் நடைபெற்றன. இதனையடுத்து நேற்று காலை வேதபாராயணம், விஷ்ணு சகஸ்ரநாமம், 108 விசேஷ ஹோம பூஜைகள் நடைபெற்றன.

காலை 8 மணிக்கு 21 உயரமுள்ள ஆஞ்சநேயருக்கு புனித நீரால் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பள்ளிப்பட்டு சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

The post 21 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Read Entire Article