சென்னை: 2026-ல் விஜய் ஆட்சி என்பது பகல் கனவு என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். தமிழ்நாட்டில் விஜய் தவெக என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளது அனைவருக்கும் தெரியும். அடுத்தாண்டு நடக்கும் சட்டசபைத் தேர்தலில் விஜய்யின் தவெக களமிறங்கவுள்ள நிலையில், அவர்கள் எத்தனை தொகுதிகளில் வெல்வார்கள். எத்தனை சதவிகிதம் வாக்குகளைப் பெற வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சில பரபரப்பு கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலடி தெரிவிக்கும் வகையில் பிரசாந்த் கிஷோர் கருத்துக்கு ஜெயக்குமார் பதிலடி தெரிவித்துள்ளார். அதில்,
2026ல் விஜய் ஆட்சி என்பது பகல் கனவு
தொண்டர்களை உற்சாகப்படுத்த அடுத்த நம்ம ஆட்சி என்று சொல்வது வழக்கம்தான். மகத்தான தலைவர் எம்.ஜி.ஆருடன் யாரையும் ஒப்பிட முடியாது; விஜய்-எம்.ஜி.ஆர். ஆக முடியாது. யார் வேண்டுமானாலும் கனவு காணலாம்; விஜய் அவர் ஆசையை பேசியிருக்கிறார்.
விஜய் போலவே பாஜகவுக்கும் பகல் கனவு
விஜய் போலவே அமித்ஷாவுக்கும் கனவு இருக்கும்; பாஜகவின் பகல் கனவு பலிக்காது. மும்மொழிக் கொள்கையை திணிப்பதை அதிமுக ஏற்கவில்லை; மாநில அரசுக்கு நிதி தர மறுப்பதை ஏற்கமுடியாது என தெரிவித்தார்.
The post 2026ல் விஜய் ஆட்சி என்பது பகல் கனவு: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் appeared first on Dinakaran.