சென்னை: ஜெயலலிதா நினைவிடத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், நிருபர்களிடம் கூறியதாவது: 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக ஆட்சி அமையும் என்று எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். இது, கனவில் வேண்டுமானால் சாத்தியம். எதார்த்தத்தில் முடியாது. எடப்பாடி பழனிசாமி 2026 சட்டசபை தேர்தலுக்கு பிறகு, எம்.ஜி.ஆர், ஜெயலலலிதா ஆகியோர் கட்டிக்காத்த இயக்கத்திற்கு முடிவுரை எழுதி விடுவார்.
ஜெயலலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் தற்போது ஒன்றாகதான் இருக்கிறோம். சிலரின் பதவி வெறியால் ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்றிணைவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இரட்டை இலை விவகாரத்தில் நல்ல முடிவு வரும் என காத்திருக்கிறோம். இவ்வாறு கூறி உள்ளார்.
The post 2026ல் அதிமுக ஆட்சி எடப்பாடியின் கனவில் மட்டுமே சாத்தியம்: டிடிவி பேட்டி appeared first on Dinakaran.