சென்னை: 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வென்றாலும் ஆச்சரியமில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் மயிலை தொகுதி எம்எல்ஏ த.வேலு இல்லத் திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதில், திமுகவின் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம். 7வது முறையாக திமுக ஆட்சி அமைக்கும். எதிர்க்கட்சியினர் எத்தகைய கூட்டணி வைத்து வந்தாலும் ஒரு கை பார்ப்போம் என்ற முடிவில்தான் இருக்கிறோம். நம்மை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும், எத்தகைய கூட்டணி அமைத்தாலும் ஒரு கை பார்ப்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
The post 2026ம் ஆண்டு தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வென்றாலும் ஆச்சரியமில்லை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.