2026 சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி? - டிடிவி தினகரன் பதில்

2 months ago 12

தென்காசி,

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

ஜனநாயக நாட்டில் கட்சி ஆரம்பிக்க மாநாடு நடத்த கோட்பாடுகளை வெளியிட தேர்தலை சந்திக்க எல்லோருக்கும் உரிமை உண்டு. மக்கள்தான் அதை உற்று நோக்கி தேர்தல் நேரத்தில் முடிவு செய்வார்கள் அதை பற்றி நாம் கருத்து சொல்வது நாகரீகம் அல்ல. ஒரு அரசியல் கட்சி வெற்றி பெறுவது என்பது மக்களின் கையில்தான் உள்ளது. அதை மக்கள் தான் முடிவு செய்வார்கள்; அதை தனி நபர்கள் தீர்மானிக்க முடியாது.

மக்கள் விரோத திமுக ஆட்சியை வீழ்த்தி மக்களுக்கான ஆட்சியை தேசிய ஜனநாயக கூட்டணி தரும். அதற்கான வியூகத்தை தேர்தல் நேரத்தில் அறிவீர்கள். தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இன்னும் நீடிக்கிறது. 2026 தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே அமமுக இடம்பெறும்.

சீமானின் உணர்ச்சி மிகுதியால் கடந்த ஓராண்டாகவே அவருடைய பேச்சுக்கள், விமர்சனங்கள் அரசியல்வாதியாக நமக்கே கொஞ்சம் வருத்தப்படும் அளவிற்கு இருக்கிறது. சீமான் மறைந்த அரசியல் தலைவர்களை தரக்குறைவாக பேசுவது, மற்ற கட்சி தலைவர்கள் பற்றி வாய்க்கு வந்தபடி பேசுவது உண்மையில் வருத்தம் அளிக்கிறது அதை அவர்தான் சரி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article