சென்னை: பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளி / உயர்நிலைப்பள்ளி / நடுநிலைப்பள்ளி / ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர், உடற்கல்வி இயக்குநர் / உடற்கல்வி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் ஆகிய பணியிடங்களுக்கு மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான இணையவழி பொதுமாறுதல் கலந்தாய்வு வரும் 9ம் தேதி அன்று காலை 10.00 மணி அளவில் அந்தந்த மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகம்/ பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. பணியிட மாறுதல் கோரி இணையவழியில் விண்ணப்பித்தவர்கள் மட்டும் இணையவழி பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
The post 2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வு appeared first on Dinakaran.