2024ல் மட்டும் 7.1 கோடி உயர்வு; உலக மக்கள் தொகை இன்று 809 கோடி

3 weeks ago 6

நியூயார்க்: உலகம் முழுவதும் உள்ள மக்கள் தொகை தொடர்பாக அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியகம் ஒரு மதிப்பீடு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அடிப்படையில் புத்தாண்டு பிறந்த இன்று உலகம் முழுவதும் உள்ள மக்கள் தொகை 809 கோடியாக உள்ளது. மிகவும் சரியாக சொல்லப்போனால் இன்று உலக மக்கள் தொகை 8,092,034,511ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் உள்ள மக்கள் தொகை எண்ணிக்கை 7.1 கோடி உயர்ந்துள்ளது.

2023ல் 7.5 ேகாடி மக்கள் தொகை அதிகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 2025 ஜனவரியில் உலகம் முழுவதும் ஒவ்வொரு நொடியும் 4.2 பிறப்புகளும் 2.0 இறப்புகளும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன. 2024ம் ஆண்டு ஜூலை மாத நிலவரப்படி இந்தியா உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்ற பெருமையை பெற்றது. அப்போது இந்தியாவில் உள்ள மக்கள் தொகை 141 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது 143 கோடியை கடந்து இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post 2024ல் மட்டும் 7.1 கோடி உயர்வு; உலக மக்கள் தொகை இன்று 809 கோடி appeared first on Dinakaran.

Read Entire Article