வாஷிங்டன்,
2024ம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி விக்டர் ஆம்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகிய இருவருக்கும் மருத்துவத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோ ஆர்.என்.ஏ.வை (RNA) கண்டுபிடித்ததற்காக இருவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோ ஆர்.என்.ஏ.வின் கண்டுபிடிப்பு மற்றும் அதற்குப் பிந்தைய படியெடுத்தல் மரபணு ஒழுங்குமுறையில் அதன் பங்கு குறித்த ஆராய்ச்சிக்காவும், விக்டர் ஆம்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது.
அவர்களின் கண்டுபிடிப்பு "உயிரினங்கள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் செயல்படுகின்றன என்பதற்கு அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை நிரூபிக்கிறது" என்று நோபல் சபை கூறியது.