200 கிலோ ஹெராயின் பறிமுதல் விவகாரம்; 8 பாகிஸ்தானியர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

4 months ago 10

புனே,

குஜராத் கடலோர பகுதியில், 2015-ம் ஆண்டு இந்திய கடலோர காவல் படை மேற்கொண்ட ரோந்து பணியின்போது, சந்தேகத்திற்குரிய வகையில் சென்ற படகு ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.

இதில், அந்த படகில் 232 கிலோ எடை கொண்ட ஹெராயின் வகை போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.6.96 கோடி என கூறப்படுகிறது. படகில் 11 பீப்பாய்களில் 20 பிளாஸ்டிக் பைகள் இருந்தன. அவற்றில் கோதுமை பழுப்பு நிற பொடி அடங்கியிருந்தது. அவற்றை ஒவ்வொன்றாக சோதனை செய்ததில், அவை ஹெராயின் வகை போதை பொருள் என்பது தெரிய வந்தது.

அந்த 8 பேரிடமும் 3 சாட்டிலைட் (செயற்கைக்கோள்) போன்கள் இருந்தன. ஜி.பி.எஸ். உபகரணங்கள் மற்றும் பிற மின்னணு சாதனங்களும் இருந்தன. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அவர்கள் அனைவரும் தெற்கு மும்பையில் எல்லோ கேட் காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த விவகாரம், சிறப்பு நீதிமன்றம் ஒன்றில் இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் அதிகபட்ச தண்டனையை நீதிபதி வழங்கியுள்ளார்.

இதில், 8 பாகிஸ்தானியர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டு உள்ளார். அவர்கள் அனைவருக்கும் தலா ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது. போதை பொருள் தடுப்பு கழக சட்ட வழக்குகளை கையாளும் சிறப்பு நீதிபதி சசிகாந்த் பங்கார், இந்த தண்டனை விவரங்களை வழங்கினார்.

Read Entire Article