20% போனஸ் கோரி கொட்டும் மழையில் என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

1 month ago 9

கடலூர்: என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் வருகின்ற 18-ம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். இங்கு சுமார் 13 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க கோரி என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் இன்று (அக்.14) மாலை நெய்வேலி பெரியார் சதுக்கம் எதிரில் ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிற்சங்க சிறப்பு செயலாளர் சேகர் பேசுகையில், வருகின்ற 18-ம் தேதி நள்ளிரவு முதல் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தார்.

Read Entire Article