20 நாளுக்கு பின் ஈரானில் விமான சேவை மீண்டும் தொடக்கம்

7 hours ago 4

தெஹ்ரான்: 20 நாள் இடைவெளிக்கு பின் ஈரானில் மீண்டும் விமான சேவை தொடங்கியது.
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே கடந்த மாதம்13ம் தேதி போர் ஏற்பட்டது. ஈரானின் முக்கிய அணு ஆயுத தளங்களை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

பதிலுக்கு இஸ்ரேலின் முக்கிய இடங்களை குறி வைத்து ஈரானும் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஈரானின் அணு ஆயுத நிலையங்களின் மீது வான்வெளி தாக்குதல் நடத்தியது. இந்த போரினால் ஈரான் தனது வான்வெளியை முழுவதுமாக மூடியது. அதன் பின்னர் இஸ்ரேலும் ஈரானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்பு கொண்டன.

இந்த நிலையில் ஈரானில் 20 நாட்களாக நிறுத்தப்பட்ட சர்வதேச விமான சேவை மீண்டும் தொடங்கியது. ஐக்கிய அரபு எமிரேட்டில் இருந்து பிளைதுபாய் விமானம் ஒன்று கோமேனி சர்வ தேச விமான நிலையத்துக்கு வந்தது.தெஹ்ரானுக்கு வந்த முதல் வெளிநாட்டு விமானத்தை வரவேற்றுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் நேற்று தெரிவித்தன.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து ப்ளைதுபாய் விமானம் தரையிறங்கியதை ஈரானின் சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார். தெஹ்ரான்,மெஹ்ராபாத் மற்றும் இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையங்களும், ஈரான் நாட்டின் வடக்கு, கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

The post 20 நாளுக்கு பின் ஈரானில் விமான சேவை மீண்டும் தொடக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article