20 ஆண்டுக்குப் பின் ரூ.50 கோடி சொத்துகளை மீட்ட நகைச்சுவை நடிகர் கவுண்டமணி

3 months ago 19

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னனி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் கவுண்டமணி. 90களில் ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் வாங்கியவர் இவர். கடந்த 1996-ம் ஆண்டு கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் நளினி பாய் என்பவரிடம் இருந்து 5 கிரவுன்ட் மற்றும் 454 சதுர அடி நிலத்தை கவுண்டமணி வாங்கியுள்ளார். அங்கு வணிக வளாகம் கட்ட அவர் திட்டமிட்டிருந்தார். அதன்படி அந்த இடத்தை அபிராமி பவுண்டேஷன் என்ற நிறுவனத்திடம் கொடுத்து 15 மாதங்களில் கட்டி முடித்து ஒப்படைக்க வேண்டும் என்ற ஒரு நிபந்தனையோடு ரூ.3.58 கோடி கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த நிறுவனம் கட்டுமானம் மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்திய வந்த நிலையில் கட்டுமான பணிகளை முடிக்கவில்லை.

2004-ம் ஆண்டு முழுமையான கட்டுமான பணிகளை நிறுத்திவிட்டு அந்த இடத்தை கையகப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து நடிகர் கவுண்டமணி சொத்தை மீட்டுத்தரக்கோரி கட்டுமான நிறுவனத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் 2006-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி கட்டுமான பணிகளை முழுமையாக முடித்துவிட்டு பணம் தராமல் இருந்தால் தான் அதனை கேட்க முடியும். முடிந்த கட்டுமான பணிகளுடன் ஒப்பிடுகையில் ரூ.63 லட்சம் அதிகமாகவே கவுண்டமணியிடம் அந்த கட்டுமான நிறுவனம் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். எனவே அந்த கவுண்டமணியிடமிருந்து பெற்ற 5 கிரவுன்ட் மற்றும் 454 சதுர அடி நிலத்தை மீண்டும் அவரிடம் ஒப்படைக்க வேண்டும் 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் மாதம் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் வீதம் கவுண்டமணிக்கு கட்டுமான நிறுவனம் வழங்க வேண்டும் என தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து கட்டுமான நிறுவனம் 2021-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு கவுண்டமணியிடம் இருந்து பணம் பெற்ற பிறகும் அந்த நிறுவனம் கட்டுமான பணியை முடிக்காததால் அந்த சொத்தை சட்டப்பூர்வமாக வைத்திருக்க முடியாது என்று தனி நீதிபதியின் தீர்ப்பை உறுதிசெய்தது. இந்த உத்தரவை எதிர்த்து மீண்டும் உச்சநீதிமன்றத்தில் கட்டுமான நிறுவனம் மேல்முறையீடு செய்தது. ஆனால் உச்சநீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்து கடந்த மே மாதம் உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தது. அதன் அடிப்படையில், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உதவியுடன் இன்று கவுண்டமணி தரப்பினர் மீட்டனர்.

The post 20 ஆண்டுக்குப் பின் ரூ.50 கோடி சொத்துகளை மீட்ட நகைச்சுவை நடிகர் கவுண்டமணி appeared first on Dinakaran.

Read Entire Article