2-வது டெஸ்ட்: சாய் சுதர்சன் மட்டுமல்ல.. மற்றொரு தமிழக வீரரும் இந்திய பிளேயிங் லெவனில் இடம்பெற வாய்ப்பு..?

9 hours ago 1

பர்மிங்காம்,

இங்கிலாந்துக்கு சென்றுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் லீட்சில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 371 ரன்களை இலக்காக நிர்ணயித்த போதிலும் அதை இங்கிலாந்து அணி கடைசி நாளில் வெற்றிகரமாக விரட்டிப்பிடித்தது. பீல்டிங் சொதப்பல் மற்றும் பின்வரிசை பேட்ஸ்மேன்களின் மோசமான பேட்டிங்கால் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டனில் நாளை மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 2 மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நிதிஷ் ரெட்டி மற்றும் தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இந்திய அணியில் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய பிளேயிங் லெவனில் ஏற்கனவே தமிழக வீரரான சாய் சுதர்சன் இடம்பெற்றுள்ள வேளையில் தற்போது வாஷிங்டன் சுந்தரும் இடம்பெறப்போவது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article