2-வது ஒருநாள் போட்டி: களமிறங்கும் விராட் கோலி - பயிற்சியாளர் வெளியிட்ட தகவல்

3 hours ago 1

கட்டாக்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கட்டாக் மைதானத்தில் நாளை மதியம் 1.30 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்தியா விளையாட உள்ளது. மறுபுறம் தொடரை இழக்க கூடாது என்பதில் இங்கிலாந்து தீவிரமாக உள்ளது. இதனால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடாத விராட் கோலி நாளை நடைபெறும் ஆட்டத்தில் களம் இறங்குவாரா? என ரசிகர்களிடையே சந்தேகம் நிலவியது. இந்த சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய பேட்டிங் பயிற்சியாளரான சித்தன்ஷு கோட்டக், விராட் கோலி குறித்து சில தகவல்களை கூறியுள்ளார்.

அதன்படி, விராட் கோலி நாளைய ஆட்டத்தில் விளையாட உடற்தகுதியுடன் உள்ளார். அவர் பயிற்சிக்காக வந்தார். சிறப்பாக பயிற்சியை மேற்கொண்டார் என கூறியுள்ளார். நாளைய ஆட்டத்தில் விராட் கோலி களம் இறங்குவது உறுதியாகி உள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Read Entire Article