
ஹராரே,
அயர்லாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி ஹராரே மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணிக்கு வெஸ்லி மாதேவரே (61 ரன்கள்) மற்றும் சிக்கந்தர் ராசா (58 ரன்கள்) தவிர மற்ற வீரர்கள் யாரும் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. இதனால் 49 ஓவர்கள் மட்டுமே விளையாடிய ஜிம்பாப்வே 245 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அயர்லாந்து தரப்பில் மார்க் அடேர் 4 விக்கெட்டுகளும், கர்டிஸ் கேம்பர் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 246 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி அயர்லாந்து களமிறங்க உள்ளது.