2 நாள் பயணமாக இன்று குமாி செல்கிறார் கவர்னர் ஆர்.என்.ரவி

3 days ago 4

நாகர்கோவில்,

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) குமரி மாவட்டம் வருகிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் காலை 11.25 மணிக்கு புறப்பட்டு 12.45 மணிக்கு திருவனந்தபுரம் வருகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலமாக மதியம் 2.15 மணிக்கு நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகை வந்தடைகிறார். அங்கு உணவு சாப்பிட்டு ஓய்வெடுக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி. மாலை 3.40 மணிக்கு வெள்ளிமலை புறப்படுகிறார். அங்கு நடைபெறும் தனியார் பள்ளி கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்கிறார்.

மாலை 5 மணிக்கு வெள்ளிமலை நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகை வருகிறார். பின்னர் மாலை 6.20 மணிக்கு கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோவில் செல்லும் அவர் இரவு 7 மணிக்கு திருவிழா சமய மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.

இதைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை செல்கிறார். அங்கு ஓய்வெடுக்கும் அவர் நாளை (திங்கட்கிழமை) காலை 6.55 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் புறப்படுகிறார். பின்னர் தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். கவர்னர் வருகையையொட்டி நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விருந்தினர் மாளிகை வளாக பகுதியில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.


Read Entire Article