திடீரென பயிற்சியை நிறுத்திய தோனி...ஓய்வை அறிவிக்க முடிவா..? - பயிற்சியாளர் வெளியிட்ட தகவல்

15 hours ago 3

கொல்கத்தா,

10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 56 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடக்கும் ஆட்டத்தில் சென்னை - கொல்கத்தா அணிகள் மோத உள்ளன.சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின. நடப்பு தொடரில் மிக மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய சென்னை அணி முதல் அணியாக தொடரில் இருந்து வெளியேறியது. 

கடந்த 2023-ம் ஆண்டு சென்னை அணி 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற நிலையில் கடந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் தனது கேப்டன் பதவியை விட்டு விலகுவதாக தோனி அறிவித்தார். தொடர்ந்து சென்னையின் கேப்டனாக ருதுராஜ் நியமிக்கப்பட்டார். இந்த சூழ்நிலையில் கடந்த ஆண்டு தோனி தனது ஓய்வு முடிவை அறிவிப்பார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இன்னும் ஒரு ஆண்டு விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு தோனி ஐ.பி.எல் தொடரில் விளையாடி வருகிறார். நடப்பு தொடரில் தொடக்க ஆட்டங்களில் சென்னையின் கேப்டனாக செயல்பட்டு வந்த ருதுராஜ் காயம் காரணமாக தொடரில் இருந்து விலக தற்போது தோனி கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், கொல்கத்தாவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்திற்கான பயிற்சிகளில் தோனி கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் இன்றைய ஆட்டத்துடன் ஓய்வு முடிவை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இது தொடர்பாக சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் எரிக் சைமன்ஸ் தோனி குறித்த விரிவான தகவல்களை கூறி இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, தோனி இன்று விளையாடுவார் என எதிர்பார்க்கலாம். அவரைப் பொறுத்தவரையில் ஆட்ட சூழ்நிலை என்ன என்பது குறித்து அவருக்கு நன்றாக தெரியும். தற்போது எந்த நிலையில் இருக்கிறார் என்பதையும் நன்கு அறிவார். ஒரு போட்டிக்கு முன்பாக அவர் தன்னை தயார்படுத்திக் கொள்ள கடுமையாக உழைப்பார்.

அவர் இருக்கும் இடத்தில் தன்னை தயார்படுத்திக் கொள்வதால் தனது பயிற்சிகளை குறைத்துக் கொள்ள முடிவு செய்திருக்கிறார். அதனால் எந்த பிரச்சினையும் கிடையாது. அவர் இப்போது தயாராக இருக்கிறார். எப்போது தயாராக இல்லை என்பது அவருக்குத் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article