வேதாந்தா நிறுவனத்தின் ஆண்டு லாபம் 172 சதவீதம் அதிகரிப்பு

14 hours ago 3

2025ஆம் நிதியாண்டின் நான்காவது காலிறுதியில் வேதாந்தா நிறுவனம் ரூ.4961 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 118% அதிகமாகும். .

2025 ஆம் ஆண்டில் வரிக்குப் பிந்தைய லாபம் முந்தைய ஆண்டைவிட 172% அதிகரித்து, ரூ.20,535 கோடியை எட்டியுள்ளது. இது தற்போது வரையுள்ள வேதாந்தா நிறுவனத்தின் மிக உயர்ந்த வருடாந்திர லாபம் ஆகும்.

ஒட்டு மொத்த ஆண்டு வருவாய் ரூ.1.51 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அலுமினியம், துத்தநாகம் மற்றும் இரும்புத் தாது உள்ளிட்டவற்றில் வலுவான செயல்திறன் காரணமாக இதுவரை இல்லாத அளவுக்கு 1,50,725 கோடி ரூபாய் ஒருங்கிணைந்த வருவாயை ஈட்டியது, இது 10% அதிகரிப்பு ஆகும்.

காலாண்டில் 118% உயர்வு என்பது சமீபத்திய வரலாற்றில் வலுவான முன்னேற்றம் ஆகும். கடந்த 12 காலாண்டுகளில் அதாவது 3 நிதியாண்டுகளில் 35% அதிகரித்துள்ளது என EBITDA (Earnings Before Interest, Taxes, Depreciation and Amortization) அளவீடுகள் தெரிவிக்கின்றன.

சுற்றுச்சூழல் சமூக ஆளுகை (ESG) மற்றும் கார்ப்பரேட் சமூகப் பொறுப்புகளில் (CSR) வேதாந்தா முக்கிய மைல்கல் சாதனையை எட்டியது.

இந்துஸ்தான் ஜிங்க் மற்றும் வேதாந்தா அலுமினியம் ஆகியவை S&P GLOBAL நிறுவனத்தின் 2024 நிலைத்தன்மை மதிப்பீட்டில்(CSA) உலகளவில் முதல் 2 இடங்களைப் பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வேதாந்தா நிறுவனத்தால் 8,045 நவீன அங்கன்வாடிகள் கட்டபட்டுள்ளன. சமூகப் பங்களிப்பிற்காக 584 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இது 6.8 மில்லியன் மக்களின் வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேதாந்தா வலுவான நிதி ஆரோக்கியத்தையும் குறைந்த அந்நியச் செலாவணி திறனையும் வெளிப்படுத்துவதால் தொடர் வளர்ச்சியை நோக்கி நகர்வதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Read Entire Article