வாஷிங்டன்: அதிபர் டிரம்ப் அறிவித்த ஜூலை 9 முடிய 2 நாள்களே உள்ள நிலையில் இந்திய-அமெரிக்க வர்த்தக உடன்பாடு ஏற்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியா-அமெரிக்கா தீவிரமாக பேச்சு நடத்தியும் வரிவிதிப்பு தொடர்பாக ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. அமெரிக்க வேளாண் விளைபொருள்கள், பால் பொருள்களை தாராளமாக அனுமதிக்க முடியாது என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. ஏப்.2ல் டிரம்ப் அறிவித்த 26% வரி விதிப்பை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடு. இந்தியாவின் கருத்துகள் தொடர்பாக அமெரிக்காவின் நிலையை பொறுத்தே வர்த்தக உடன்பாடு ஏற்படுமா என்பது தெரியவரும்.
The post 2 நாளில் இந்தியா-அமெரிக்க வர்த்தக வர்த்தக உடன்பாடு ஏற்படுமா? appeared first on Dinakaran.