2 நாட்களில் 3 கோடி பார்வையாளர்களை கடந்த 'தக் லைப்' படத்தின் ரிலீஸ் தேதி டீசர்

5 months ago 18

சென்னை,

36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'தக் லைப்'. இப்படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் திரிஷா ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதனையடுத்து இப்படம் எப்போது திரைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர்.

கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் 'தக் லைப்' படத்தின் வெளியீட்டுத் தேதிக்கான டீசரை படக்குழுவினர்  கடந்த 7ம் தேதி வெளியிட்டனர். அதில் இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் 5-ந் தேதி வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், 'தக் லைப்' படத்தின் ரிலீஸ் தேதி டீசர் 2 நாட்களில் தற்போது 3 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

The Thugs have taken over!#ThugLife Release Date Teaser Hits 25 Million Views#ThugLifeFromJune5th in Cinemas Worldwide#KHBirthdayCelebrations#HBDKamalHaasanTamil - https://t.co/uveSa7Pu5c #KamalHaasan #ManiRatnam #SilambarasanTR A #ManiRatnam Film@ikamalhaasanpic.twitter.com/TDJFb1WSS4

— Raaj Kamal Films International (@RKFI) November 8, 2024
Read Entire Article