2 இந்திய நிறுவனங்கள் உட்பட ரஷ்யாவின் அணுசக்தி துறை நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை

3 hours ago 4

வாஷிங்டன்: ரஷ்யாவின் எரிசக்தி துறை நிறுவனங்கள் மற்றும் அந்நாட்டிற்கு உதவிய இரண்டு இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் விரைவில் பதவி ஏற்கிறார். இந்நிலையில் பதவியில் இருந்து வெளியேறும் அதிபர் ஜோ பைடன் ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதார தடைகளை நேற்று முன்தினம் விரிவுபடுத்துவதாக அறிவித்தார்.

குறிப்பாக எரிசக்தி துறை நிறுவனங்களுக்கு எதிராக தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். ரஷ்யாவிற்கு உதவியதாக இந்திய நிறுவனங்களான ஸ்கைஹார்ட் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் மற்றும் அவிஷன் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் ஆகிய 2 நிறுவனங்களுக்கும் அமெரிக்கா தடை விதித்துள்ளது.

The post 2 இந்திய நிறுவனங்கள் உட்பட ரஷ்யாவின் அணுசக்தி துறை நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை appeared first on Dinakaran.

Read Entire Article