
டாக்கா,
வங்காளதேச கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான நசீர் ஹொசைன் 2011 முதல் 2018-ம் ஆண்டு வரை அணியில் தவிர்க்க முடியாத வீரராக வலம் வந்தார். அந்த கால கட்டங்களில் 115 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 2 சதங்கள் மற்றும் 14 அரை சதங்கள் அடித்துள்ளார்.
இதனிடையே கடந்த 2023-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்பு சட்டத்தை மீறியதற்காக நசீர் ஹொசைன் 6 மாத இடைநீக்கத்துடன் 2 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை செய்யப்பட்டார். அதன் காரணமாக அவர் உள்ளூர் தொடர்கள் உள்பட எந்த கிரிக்கெட்டிலும் களமிறங்கவில்லை.
இந்நிலையில் அவரது தடை காலம் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. எனவே அவர் மீண்டும் கிரிக்கெட் விளையாட தொடங்கலாம் என்று வங்காளதேச கிரிக்கெட் வாரியம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
