சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை மானிய கோரிக்கையின் மீது பதில் அளித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: பதவிக்காக அரசியலுக்கு வந்தவர் அல்ல, நம்முடைய முதல்வர். தமிழக முதல்வருக்கு கிடைத்த முதல் பதவியே மிசா சிறைவாசம். இந்தியாவினுடைய ஜனநாயகத்தை காக்க 50 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்கிய நம்முடைய முதல்வர் இன்றைக்கும் இந்தியாவுடைய ஜனநாயகத்தை காக்கின்ற களத்தில் நிற்கின்றார்.
1930ம் ஆண்டு பெரியார் இந்தி எதிர்ப்பு போரை தொடங்கி வைத்தார். 1960ம் ஆண்டு அண்ணா தலைமையில் மாணவர்கள் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை முன் நின்று நடத்தினார்கள். தமிழுக்காக தண்டவாளத்தில் தலையை வைத்த கலைஞர் ஐம்பெரும் முழக்கங்களில் ஒன்றான இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் என்று முழங்கினார். 1930ல் தொடங்கிய அந்த இந்தி திணிப்பு எதிர்ப்பு போரை, நம்முடைய முதல்வர் காலத்தில் நிச்சயம் முடித்து வைப்பார். முதல்வர் தலைமையில் ‘‘தமிழ்நாடு வெல்லும் தமிழ்நாடு போராடும்’’. இவ்வாறு துணை முதல்வர் பேசினார்.
The post 1930ல் தொடங்கிய இந்தி திணிப்பு எதிர்ப்பு போரை முதல்வர் நிச்சயம் முடித்து வைப்பார்; துணை முதல்வர் உதயநிதி பேச்சு appeared first on Dinakaran.