18வது சீசன் ஐபிஎல் தொடர்; மார்ச் 22ல் முதல் போட்டியில் கேகேஆர்-ஆர்சிபி மோதல்: ஓரிரு நாளில் அட்டவணை வெளியாகிறது

3 months ago 8

மும்பை: 10 அணிகள் பங்கேற்கும் 18வது சீசன் ஐபிஎல் தொடர் மார்ச் 22ம் தேதி தொடங்க உள்ளது. முன்னதாக மார்ச் 23ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஒருநாள் முன்னதாக தொடங்குகிறது. இதற்கான அட்டவணை ஓரிரு நாளில் வெளியாக உள்ளது. இதனிடையே மார்ச் 22ம் தேதி முதல் போட்டியில் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்ள உள்ளது. கடந்த ஆண்டு 2வது இடம் பிடித்த சன் ரைசர்ஸ் ஐதராபாத் தனது முதல் போட்டியில், சொந்த மண்ணான ஐதராபாத் ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதுகிறது.

அகமதாபாத், மும்பை, சென்னை, பெங்களூரு, லக்னோ, முல்லன்பூர், டெல்லி, ஜெய்ப்பூர், கொல்கத்தா மற்றும் ஐதராபாத் ஆகிய மைதானங்களில் போட்டிகள் நடைபெறும். அதே நேரத்தில் கவுகாத்தி மற்றும் தர்மசாலாவில் சில போட்டிகள் நடக்கும். குவாலிபயர் மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் ஐதராபாத்திலும், 2வது குவாலிபயர் மற்றும் இறுதி ஆட்டம் கொல்கத்தாவில் நடைபெறும். ஐபிஎல் மரபுப்படி, இறுதிப்போட்டி நடப்பு சாம்பியனின் சொந்த மைதானமான ஈடன் கார்டனில் மே 25ம் தேதி நடைபெறும். அட்டவணை தொடர்பாக அணிகளின் உரிமையாளர்களுடன் ஐபிஎல் நிர்வாகம் ஆலோசனை செய்துள்ளது.

 

The post 18வது சீசன் ஐபிஎல் தொடர்; மார்ச் 22ல் முதல் போட்டியில் கேகேஆர்-ஆர்சிபி மோதல்: ஓரிரு நாளில் அட்டவணை வெளியாகிறது appeared first on Dinakaran.

Read Entire Article