170 மாத்திரைகளை சாப்பிட்ட பெண்

2 days ago 2

சேலம், ஜன.30: சேலம் அன்னதானப்பட்டி கருவாட்டு மண்டி பகுதியை சேர்ந்தவர் அருள்மணி(49). இவரது கணவர் சச்சிதானந்தம் ஏற்கனவே இறந்த நிலையில், மகன், மகளுடன் வசித்து வந்தார். கடந்த 10ஆண்டுகளாகவே முகவாதத்தால் பாதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் கடந்த 25ம்தேதி வீட்டில் இருந்த 170 மாத்திரைகளை ஒன்றாக சாப்பிட்டு மயங்கிய நிலையில் அருள்மணி கிடந்தார். அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இறந்துபோனார். இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post 170 மாத்திரைகளை சாப்பிட்ட பெண் appeared first on Dinakaran.

Read Entire Article