17 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது: தொழிலாளி மீது போக்சோ வழக்கு

20 hours ago 2

சேலம்,

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள செல்லியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு. அவரது மகன் மணிகண்டன் (வயது 26). கூலித்தொழிலாளி. இவரும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமியும் காதலித்து வந்தனர். இவர்கள் 2 பேரும் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டு செல்லியம்பாளையத்தில் குடும்பம் நடத்தினர். இதில் அந்த சிறுமி கர்ப்பமானார்.

பிரசவத்திற்காக சிறுமி பெற்றோர் வீட்டுக்கு சென்றார். பின்னர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. டாக்டர்கள் பரிசோதித்தபோது சிறுமிக்கு 17 வயது ஆவது தெரியவந்தது. இது குறித்து டாக்டர்கள் ஆத்தூர் அனைத்து மகளிர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சிறுமியை குழந்தை திருமணம் செய்து காப்பமாக்கிய மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Read Entire Article