17 மாணவர்களுக்கு பாலியல் தொல்லை பள்ளி தாளாளர் உட்பட 3 பேர் கைது

2 months ago 10

தாராபுரம்: தாராபுரம் அடுத்த உப்பாறு அணைக்கு செல்லும் சாலையில் உள்ள தனியார் பள்ளி மாணவர் விடுதியில் உள்ள 10ம் வகுப்பு மாணவர் ஒருவர், நேற்று முன்தினம் இரவு சைல்ட் லைன் அலுவலகத்தை போனில் தொடர்பு கொண்டு விடுதி துணை வார்டன் சரண், தனக்கும், பல மாணவர்களுக்கும் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக கூறி உள்ளார். உடனடியாக கல்வித்துறை அதிகாரிகள், சைட் லைன் அலுவலக அதிகாரிகள், போலீசார் நேற்று காலை விடுதிக்கு சென்று விசாரணை நடத்திசரணை கைது செய்தனர். இதை மறைத்த தலைமை வார்டன் ராம்பாபு (34), புகார் செய்த மாணவரை அடித்த பள்ளி தாளாளர் சுரேஷ்குமார் (50) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

The post 17 மாணவர்களுக்கு பாலியல் தொல்லை பள்ளி தாளாளர் உட்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article