
மும்பை,
மராட்டியம் மாநிலம் நவிமும்பை பன்வெல் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கடந்த 3-ந்தேதி பள்ளிக்கு புறப்பட்டார். அந்த சிறுமியை பக்கத்து வீட்டை சேர்ந்த வேன் டிரைவர் வாகனத்தில் ஏறுமாறும், பள்ளியில் கொண்டு போய் விடுவதாகவும் தெரிவித்தார்.
இதனை நம்பிய சிறுமி வேனில் ஏறினார். ஆனால் வேனை பள்ளிக்கு ஓட்டிச்செல்லாமல் சிஞ்ச்வாலி சிவாரா பகுதிக்கு டிரைவர் ஓட்டி சென்றார். அங்கு மறைவான இடத்தில் வேனை நிறுத்தி சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமி வீடு திரும்பியதும் நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இந்தப்புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பள்ளி வேன் டிரைவரை பிடித்து கைது செய்தனர். டிரைவரை சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி 18-ந்தேதி வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.