அமெரிக்க தேசிய நுண்ணறிவு பிரிவு இயக்குநருடன் அஜித் தோவல் சந்திப்பு

2 hours ago 3

புதுடெல்லி,

அமெரிக்க தேசிய நுண்ணறிவு பிரிவின் இயக்குநர் துளசி கப்பார்டு இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். அவர் புதுடெல்லியில், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவலை நேற்று மாலை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பில், இந்தோ-அமெரிக்க உறவுகளில் பல்வேறு அம்சங்களை பற்றி இருவரும் விரிவாக ஆலோசனை மேற்கொண்டனர். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அரசில் முக்கிய பொறுப்பேற்றுள்ள கப்பார்டின் 2-வது சர்வதேச பயணம் இதுவாகும். இதன்படி, அவர் ஜப்பான், தாய்லாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கும் அடுத்தடுத்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் இந்தியா வந்துள்ள துளசி கப்பார்டு, டெல்லியில் இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறும் ரெய்சினா பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக நாளைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். இந்த கூட்டத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த முக்கிய பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர்.

இதற்காக அவர்கள் இன்று காலை முதல் இந்தியாவுக்கு வரிசையாக வந்து சேர்ந்துள்ளனர். இந்த கூட்டத்தில் இந்திய அதிகாரிகள் மற்றும் பிற நாட்டு அதிகாரிகளையும் சந்தித்து, கப்பார்டு இருதரப்பு கூட்டங்களை நடத்த இருக்கிறார் என டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

Read Entire Article