15 குரங்குகள் கூண்டு வைத்து பிடிப்பு வனத்துறையினர் நடவடிக்கை விவசாய நிலத்தில் சுற்றித் திரிந்த

2 days ago 3

பேரணாம்பட்டு,ஏப்.17: பேரணாம்பட்டு மேல்பட்டி செல்லும் சாலையில் அன்சார் என்பவரின் விவசாய நிலம் உள்ளது. அதில் 100க்கும் மேற்பட்ட மாமரங்கள் மற்றும் தென்னை மரங்களை வளர்த்து வருகிறார். இந்நிலையில் தற்போது, மா மரங்களில் மாங்காய்கள் காய்க்க தொடங்கியுள்ளது. இந்த நிலத்தில் 20க்கும் மேற்பட்ட குரங்குகள் தினமும் புகுந்து மாங்காய்களையும், தேங்காய்களையும் சாப்பிட்டு சேதம் ஏற்படுத்தி வந்துள்ளது. இதனால் வேதனை அடைந்த அன்சர் பேரணாம்பட்டு வனத்துறையினரிடம் நிலத்தில் உள்ள குரங்குகளை பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அதனை தொடர்ந்து பேரணாம்பட்டு வனச்சரகர் சத்திஷ்குமார் உத்தரவின் பேரில் நேற்று கார்டு ரமேஷ் மற்றும் வனத்துறையினர் சுமார் 15 குரங்குகளை கூண்டு வைத்து பிடித்துள்ளனர். அதன் பின்பு பிடிப்பட்ட குரங்குகளை தமிழக எல்லையான பத்தலபல்லி மலைப்பகுதியில் உள்ள காப்பு காட்டில் கொண்டு சென்று விட்டனர்.

The post 15 குரங்குகள் கூண்டு வைத்து பிடிப்பு வனத்துறையினர் நடவடிக்கை விவசாய நிலத்தில் சுற்றித் திரிந்த appeared first on Dinakaran.

Read Entire Article