15 இரும்பு சத்து மாத்திரைகளை ஒரே நேரத்தில் உண்ட பள்ளி மாணவன்

2 months ago 12
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில், ஒரே நேரத்தில் உடம்பில் சத்து ஏற்றலாம் என்று கருதி  15 இரும்புசத்து மாத்திரைகளை உண்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு  மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவன்நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். வியாழக்கிழமைதோறும் பள்ளியில்  இரும்புசத்து மாத்திரை வழங்கப்படும் நிலையில், எஸ்.கே வேலாயுதம் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் மாணவர் ஒருவர், தண்ணீர் குடிக்கும் இடத்தில் மற்ற மாணவர்கள் வேண்டாம் என்று வைத்துச் சென்ற மாத்திரைகளை எடுத்து சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. 
Read Entire Article