இந்தூர்: மபி மாநிலம் இந்தூரில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவர் பரத் பாஜ்பேயி. இவர் தொடர்ந்து 18 ஆண்டுகளாக இடைவிடாமல் 15,000 உடல்களுக்கு பிரேத பரிசோதனை நடத்தி சாதனை புரிந்துள்ளார். கடந்த 2006 முதல் தொடர்ச்சியாக அ வர் பணிக்கு வந்ததில் இரண்டு முறை லிம்கா சாதனை புத்தகத்தில் அவர் இடம் பெற்றுள்ளார். கடந்த 18 ஆண்டுகளில் ஒரு முறை உடல் நிலை பாதிக்கப்பட்டதால் ஒரு மாதம் விடுப்பு எடுத்திருந்தார். பாஜ்பேயி வரும் ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற உள்ளார். கோவிந்த் பல்லப் பந்த் மாவட்ட மருத்துவமனையின் தலைமை கண்காணிப்பாளர் டாக்டர் ஜி.எல். சோதி,‘‘கடந்த 2006ல் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைத் துறை நிறுவப்பட்டது.
டாக்டர் பாஜ்பாய் அதில் அயராது பணியாற்றி வருகிறார். கடந்த 18 ஆண்டுகளாக அவர் வழக்கமான விடுப்பு எதுவும் எடுக்கவில்லை. 15,000க்கும் மேற்பட்ட பிரேத பரிசோதனைகளை நடத்தியுள்ளார். இந்த முக்கியமான பணிக்கான அவரது ஆழ்ந்த அர்ப்பணிப்பை இது பிரதிபலிக்கிறது, ” என்றார். பரத் பாஜ்பேயி,‘‘ பிரேத பரிசோதனைகள் மருத்துவ-சட்ட வழக்குகளில் ஒரு முக்கியமாகும். அதை ஒத்திவைக்க முடியாது. என் குடும்பத்தினர் எப்போதும் ஆதரவாக இருந்து வருகின்றனர். வேலைக்குச் செல்வதை அவர்கள் தடுக்கவில்லை,’’ என்றார்.
The post 15,000 பிரேத பரிசோதனைகள் இந்தூரை சேர்ந்த அரசு டாக்டர் சாதனை appeared first on Dinakaran.