13 வயது சிறுமி பலாத்காரம்: வாலிபருக்கு 30 ஆண்டு சிறை

6 days ago 6

கோவை: கோவையில் 13வயது சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு, 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் கடந்த 2021ம் ஆண்டு 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக பேரூர் அனைத்து மகளிர் போலீசார் சதீஷ்குமார் என்கிற குஞ்சான் (35) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சதீஷ்குமாருக்கு 30 ஆண்டு சிறைதண்டனை மற்றும் 12 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்கினார்.

வழக்கினை சிறந்த முறையில் புலன்விசாரணை மேற்கொண்ட புலன்விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய பெண் தலைமை காவலர் கலையரசி ஆகியோர்களை கோவை மாவட்ட எஸ்.பி. கார்த்திகேயன் பாராட்டினார்.

The post 13 வயது சிறுமி பலாத்காரம்: வாலிபருக்கு 30 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Read Entire Article